ஜே.ஜே சில குறிப்புகள் – வாசிப்பனுவம்
ஜே.ஜே சில குறிப்புகள் – வாசிப்பனுவம்
தமிழில் முதல் நவீனத்துவம் என்ற சிறப்புக்குரிய இந்நாவல் வெளிவந்தது 1981 ம் ஆண்டு. இன்று முப்பத்தைந்தாண்டுகள் கடந்து விட்ட பின்பும் இதைப் பற்றி பேசிக்கொண்டிருப்பது ஒரு தவம் போன்றுள்ளது. நாவல் முழுக்கவே பேசப்படுவது தனி மனிதவாதத் தத்துவம். அது ஜே ஜே என்கிற பெயரில் சு.ராவின் சிந்தனையா அல்லது சி.ஜே தாமிஸின் (இங்கு சி.ஜே தான் ஜே ஜே என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது) சிந்தனையா என்ற தேடல் தீவிர இலக்கிய படித்தவர்களுக்குள் எழுவது நிச்சயம்.
கதைக்களம் மிக எளிமையான ஒன்று இதற்கு முன்பு சு.ரா எழுதிய புளியமரத்தின் கதையைப் போல ஒரு ஊரின் அமைப்புவாத குழுக்களையோ அல்லது அதன் பின் எழுதிய குழந்தைகள் பெண்கள் ஆண்கள்;; நாவலைப்போன்று ஒரு வகையில் செமி ஆடோ பயோகிராபி போன்ற வடிவமோ அல்ல. ஒரு இளம் எழுத்தாளன் (அ) தீவிர வாசகன் தன் ஆதர்ஷ எழுத்தாளளை தேடிச் செல்வதும் அவனைப் பற்றி சேகரித்து எழுதுவதும் என்ற வடிவில் நீள்கிறது. நாவலின் தொடக்கத்தலிருந்து கடைசி அனுபந்தமாக சேர்க்கப்பட்டுள்ள ஜேஜே யின ;படைப்புகள் என்று பட்டியல் வரை புனைவென்பதை மீறி அமைந்திருக்கிறது. இதுவே இந்நாவலின் விவாதத்திற்கு இட்டுச்சென்றதாக அறிப்படுகிறது.
தனிமனித வாதம் ஒரு சமூக அமைப்பின் மீது கொண்டிருக்கும் கோபமே ஜேஜே. ஆனால் அந்த தனி மனித வாதம் ஒரு ஒட்டுமொத்த தரிசனத்தை நிதழ்த்திருக்கிறாவென்றால் இல்லை என்றே சொல்ல முடிகிறது. ஜேஜே யின் வாழ்க்கை சொல்வதாக ஆசிரியர் அவன் டயிரிக் குறிப்புகளை இரண்டாம் பாகமாக சேர்க்கிறார். அக்குறிப்புகள் அவனின் இருபது வயதிலிருந்து தொடங்குவதாக எடுத்துக்கொண்டால் அவன் வைக்கின்ற வாதம் என்ன? தத்துவ சிந்தனை என்ன? சமூகத்தின் மீது அவன் கேட்கும்; கேள்விகளாகவும் அவனின் பிடிக்காத லௌகீக வாழ்வையும் பேசுவதாக உள்ளது. ஆனால் அதற்கு ஜேஜே தரும் நியதிகள் ஏதுமில்லை. ஒரு வாழ்க்கையில் தரிசனம் என்பது ஒரு மன ஆழத்திலிருந்து பெறப்பட்ட ஒட்டுமொத்த பார்வை என குறிப்பிடுகிறார்கள் அத்தகைய தரிசனத்தை NpஜNpஜ நிகழ்த்தாமல் போய்விடுகிறது. முதல் பாகம் என பாலு அதாவது ஒரு இளம் எழுத்தாளன் தன்னுள் உறங்கிக்கிடக்கும் பெரும் பிம்பத்தை தேடிப்போவதில் ஆசிரியர் படைக்கின்ற புனைவு போகப் போக சலிப்பூட்;;டத்தொடங்குகிறது. அது ஒருவகையில் சுராவின் சிந்தனை ஆழமாக .இருக்கலாம். ஜேஜேயின் வாழ்வை சொல்வதில் தன் அக உலகையும் சேர்த்து சொல்லிச் செல்கிறார்.
இதில் முக்கியமாக ஜேஜே நாவலை சுராவின் வாழ்வோடு ஒப்பிட்டு நோக்குவது இன்னும் அதன் ஆழத்தை தெரிந்து கொள்ள முடியும். ஜெயமோகன் தன்னுடைய விமர்சனத்தில் அய்யப்பன் கதா பாத்திரம் சுராவின் ஆதர்ஷமான எம் கே கோவிந்தனையே வார்த்தெடுத்திருப்பதாகச் சொல்கிறார். மேலும் அதில் சுரா கோவிந்தனின் தத்துவத சிந்தனையைத் தகர்த்து மேலும் ஓரடி முன்னோக்கி நகர்கிறார் என்கிறார். குருவை கடந்து போதல். (இது ஜெயமோகனுக்கும் அப்போதே பொருந்தியிருக்கிறதென என்னால் தற்போது அறிந்துணர முடிகிறது.) இப்படியாக நாவலின் கதாப்பாத்திரங்களை தன் வாழ்வின் நிஜத்திலிருந்து எடுத்திருக்கிறார். நாவலின் தொடக்கத்தில் அய்யப்பனோடு இனக்கமாக தோன்றும் ஜேஜே பிற்பகுதியில் அவரை விமர்ச்சிப்பதை பார்த்தால் புரியும்
ஜேஜே தன்னை ஒரு தீவிர ஃபர்பக்ஷனலிஸ்டாக உருவகித்திருக்கும் உலகத்தில் வாழ்கிறான். அவனால் ஒரு சின்ன அலட்சியத்தன்மையை கூட பொறுத்துப் போக முடியாது. ஒரு பொருளை வைத்த இடத்திலிருந்து தேடுபவர்களைக் கண்டால் ஆத்திரம் வருகிறது அவனுக்கு. இது மட்டுமில்லாமல் அவன் மீது பிறரின் போலியான பாசமுமää பிறர் நாட்டின் மீது கொள்ளும் பக்தியும் அவனுக்கு அலுப்பூட்டுகிறது.
எங்கல்ஸின் கூற்றுபடி எல்லா தத்துவங்களின் அடிப்படையான ஒன்று ‘சிந்தனைக்கும் இருப்புக்கும் இடைப்பட்ட தொடர்பு என்ன என்பதே’ இக்கேள்வியே ஜேஜே வினுள் ஒரு பெரும் விருட்ஷமாக வளர்ந்துவிடுகிறது. அதனை அவன் தேடி ஆராயும் வழியே இலக்கியம். பின் அதன் மீது போலி .இலக்கியச் சமுதாயம் கொள்ளும் ஆக்கிரமிப்பபை பகடி செய்துவிட்டு சலிப்புடைகிறான். அவனின் தேடல் நிறைவுறாது முடிந்து போகிறது.
இந்நாவல் படித்து முடிக்கின்ற போது நமக்கு தோன்றுவது இப்படியான தனி மனித வாத பிம்பமுடைய ஒருவனால் தோற்றுவிக்கப்படும் கருத்துகளின் எதிர்ப்புத்தன்மைகள். ஆனால் அதுவே அதன் இந்நாவலின் வீழ்ச்சியாக மாறிவிடுகிறது. எனினும் கருத்துதளத்தில் இயங்கும் முதல் நவீனத்துவத்தின உச்சமாகவும்ää சிஜேயின வாழ்வை புனைவாக்கி திரிந்து அதன் பாதையை உருவாக்கி ஓடும் வீச்சத்தில் பின்நவினத்துவத்தின் முதல் படியாகவும் இந்நாவல் இன்றும் கொண்டாடப்படுகிறது. ஜேஜே விட்டுச்சென்ற இடைவெளிகளே இன்று நம்மை நிறப்பிக்கொள்ள தூண்டியிருக்கிறது.
இதுவரை எழுந்த விமர்சனங்கள்……..
ஜெயமோகன் தன்னுடைய நாவல் கோட்பாட்டிலும் சரி அவருடைய இணையத்தளத்திலும் இதைப்பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார். இதுவரை தமிழில் இந்நாவலுக்கு எழுந்த விமர்சனம் போல பிரிதொன்றும் அடைந்திருக்காது. சிலர் இது அப்படியே ஆங்கில நாவலின் தழுவல் என்றும் எழுத்தாளர் அம்பை போன்றவர்கள் பிரஞ்ச் நாவலின் வடிவம் என விமர்சித்துள்ளனர்.
இந்நாவலின் வடிவம் தமிழ் வாசகர்களுக்கு ஒரு அயர்ச்சியை ஏற்படு;த்தியிருக்கிறதென்பது மறுக்க முடியாது. நானும் முதல் வாசிப்பில் ஒன்றும் பிடிபடாமல் தான் போயிருந்தேன். சில நேரம் தனக்குள்ளே பேசிப்போவது போலவும் தோன்றியிருக்கிறது.
பின் பரந்துபட்ட வாசிப்பின் வழியே ஜேஜேவை புரிந்துகொண்டது போல வேறெதுவும் இல்லை. அக்னி நதிää முதலில்லாதததும் முடிவில்லாததும் போன்ற நாவல்களின் வடிவத்திற்கு நிகராக இதனை சொல்ல முடியும். பிரஞ்சிலும் ரஷ்ய இலக்கியத்திலும் இது போன்ற வடிவ உத்தியில் நிறைய வந்ததாக சொல்லப்படுகிறது அப்படி ஏதாவொன்றை நாம் படித்து பழக்கியிருக்கும் பட்சததில் இதன் வடிவ படைப்பு நம்மை சோற்வுற்றிருக்காது.
தமிழ் இலக்கியத்தின் மீதும் பண்பாட்டுச் சூழல் மீதும் ஜேஜே (சுரா) வைக்கும் விமர்சனங்கள் படிமமாக மாறிவிட்டிருக்கிறது .