Month: September 2023
Published in Puthuezhuthu July 2023 இவ்வளவு சீக்கிரம் நூறு மரணங்களை நெருங்கிவிடும் என்று பிரான்ஸிஸ் சேவியர் எதிர்பார்க்கவில்லை. அவருடைய கணிப்பு, நூறைத் தொட்டதும் அதாவது, அதற்குள் தனக்கும் அகவை எழுபத்தி ஐந்தை சமீபித்துவிடும் அத்துடன் இனி ஆத்மாக்களை பரலோக ராஜ்யத்திற்கு அனுப்பி வைக்கும் இந்த அலுப்பூட்டும் விதியிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தார். வயது, மரணம் இரண்டில் மரணம் எண்ணிக்கையில் முந்திவிட்டது. எழுபத்திஐந்துக்கு இன்னும் மூன்று வருடங்கள் இருக்கின்றன அதுவரை எத்தனை மரணங்களுக்காக் காத்திருக்க வேண்டும் என்பதுதான் …
Continue reading “ஃபாதர் ப்ரான்ஸிஸ் சேவியரின் நூறாவது மரணம்”
Published in Manal Veedu jan 2023 அநுபந்து விதியின் கையில் விழுவதற்கு முன்பே இறந்துவிட்டார். லதா சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. விதி அவரைக் கொன்றதாகத்தான் ஊரில் நாங்கள் அனைவரும் நம்பினோம். விதி அநுபந்தைச் சந்திப்பதற்கும் அநுபந்து இறப்பதற்கும் இடைப்பட்ட கால இடைவெளி ஒரு நாள் பொழுது. அந்த ஒரு நாள் பொழுது முழுக்க விதி அவருடன் இருந்துள்ளது. விதி அவர் இறப்பதற்காகக் காத்திருந்ததா? அநுபந்து இறந்துவிடுவாரென்று எனக்கும் தெரியாது. ஆனால், அன்னைக்கு ஏதோ நடக்கப் …