தூயன் Writer
  • கட்டுரைகள்

மூளை எனும் காலனிய அரசு

October 5, 2022 / thuyan / 0 Comments

டேவிட் ஈகிள் மேனின்  Livewired- Inside Story of Ever-changing Brain தனது எல்லையை வகுத்துக்கொள்ளவும் இருப்பைக் காப்பாற்றிக்கொள்ளவும் மனிதன்  நடத்திக்கொண்டிருக்கும் போரட்டத்தைத்தான் மூளைக்குள் நியூரான்கள் நடத்துகின்றன.  ஒரு நாடு அல்லது நகரம் தன்னைச் சுற்றி நடக்கும் போராட்டங்களிலிருந்து காப்பாற்றிக்கொண்டு (எதிர்த்து சண்டையிடுவதும்) அழிவிலிருந்து தன்னை மீள் உருவாக்கம் செய்து கொள்வதை நாம் பார்ப்பதுதான் நம்மால்  பார்க்கமுடியாத மூளையின் செயல்பாடு. டேவிட் ஈகிள்மேனின் சமீபத்திய லைவ்வயர்ட்(Livewired) புத்தகம் மூளைப் பற்றிய அறிவியலை இப்படித்தான் தொடங்குகிறது. “படைப்புத்திறன் என்பது …

Continue reading “மூளை எனும் காலனிய அரசு”

  • புத்தகங்கள்

September 27, 2022 / thuyan / 0 Comments

கதீட்ரல்- நாவல்

  • புத்தகங்கள்

இருமுனை

September 27, 2022 / thuyan / 0 Comments

சிறுகதை தொகுப்பு

  • கட்டுரைகள்

பெருந்தேவி கவிதைகள்

September 23, 2022 / thuyan / 0 Comments

கட்டுரை பெருந்தேவியின் கவிதைகள் – பரிணாமம் அடைந்த உயிரி ஒரு வெள்ளிக்கிழமை கதைஒரு வெள்ளிக்கிழமை இரவு ஒருவன் /தன் கனவில் / தெரியாத ஒருத்தியின் பாதத்தை / நக்கிக்கொண்டிருந்தான்/ அதே இரவு ஒருத்தி /தன் கனவில் /தெரியாத ஒருவனுக்காக /ஒரு மலையுச்சியிலிருந்து குதித்திக்கொண்டிருந்தாள்/ அக்கணமே அனைத்தும் அறிந்த முகநூல் செயலி / ஸ்ட்லெட்டோ அணிந்த பெண்ணொருத்தி /மலையுச்சியிலிருந்து குதிக்கும் விளம்பரத்தை /இருவர் நேரக்கோட்டிலும் பகிர்ந்தது/. அக்கணமே அவர்கள் /ஸ்ட்லெட்டோவை மலையுச்சியைத் /தேடத்தொடங்கினார்கள் /அக்கணமே முகநூல் செயலி /இருவர் …

Continue reading “பெருந்தேவி கவிதைகள்”

  • புத்தகங்கள்

டார்வினின் வால்

September 22, 2022 / thuyan / 0 Comments

இரண்டாவது சிறுகதை தொகுப்பு எதிர் வெளியீடு, ஜனவரி 2022

  • கட்டுரைகள்

சமகால சர்வதேசப் புனைவுகளின் போக்கும் தமிழ் புனைவுகளும்-

December 30, 2021 / thuyan / 0 Comments

                                                Style is the physiognomy of the mind. -Arthur schopenhauer சமீபத்தில் வெளியான ”உன்னதம்” இதழ் தமிழ் வாசிப்புச்சூழலுக்கு முக்கியமான பங்காற்றியிருக்கிறது. நிறைய வெளிநாட்டு எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவர்களெல்லாரும் சமகால சர்வதேசப் படைப்பாளிகள். பொதுவாக அயல் இலக்கியங்கள் புனைவுகளில் வேவ்வேறு பரிசோதனைகளை செய்யக் கூடியன. கதையின் போக்கு, கரு, உத்தி, மொழி, கதைசொல்லல் என ஒவ்வொன்றிலும் புது முயற்சிகள் நிகழ்ந்துகொண்டேயிருக்கும். இன்றைக்கு சர்வதேசப் புனைவுகள் எங்கு வெளிவந்தாலும் நமக்குக் கிடைக்கும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. …

Continue reading “சமகால சர்வதேசப் புனைவுகளின் போக்கும் தமிழ் புனைவுகளும்-“

  • கட்டுரைகள்

நூல் விமர்சனம்

December 30, 2021 / thuyan / 0 Comments

தி.ஜாவின் அம்மணி  vs  நீட்ஷேயின் ஃப்ரீ ஸ்பிரிட் சமூகம் என்பது சுயத்தாலும் தன்னிலையாலும்( இங்கு எழுவாய் என்பதை தன்னிலை என்று பயன்படுத்திக் கொள்கிறேன்) பிணைக்கப்பட்டிருக்கிறது. சுயம் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டது எனில் தன்னிலை சுயத்தின்மீது வினையாற்றக்கூடியதாக இருக்கிறது. சுயத்திலிருந்து தன்னிலையும் தன்னிலையிலிருந்து சுயமும் விடுபடுவது சாத்தியமற்றது. சுயம்தான் தன்னிலையை முடிவு செய்கிறது. தன்னிலை சுயத்திலிருந்து விடுபடல் என்பது ஒரு பாவனையே ஒழிய முழுமையான விடுபடல் இல்லை. அது சுயத்தையும் தன்னுடன் துாக்கிக்கொண்டே பறக்கிறது. இதை இன்னும் சற்று ஆழமாக …

Continue reading “நூல் விமர்சனம்”

  • கட்டுரைகள்

கட்டுரை

December 30, 2021 / thuyan / 0 Comments

மனித இனம் அழிகிறதா? யுவால் நோவா ஹராரி ‘சேப்பியன்ஸ்’ நாலில் ‘மனிதன் விரைவிலேயே நியண்டர்தால்போன்ற அழிந்த உயிரனத்தையும், செயற்கை நூண்ணறிவுத்திறனால் அதிமனிதனையும் உருவாக்கும் வல்லமையைப் பெற்றுவிடுவான்’ என்று குறிப்பிடுகிறார். நூலின் இறுதியில் ‘சூழலையும், உணவு உற்பத்தியையும், நகரங்களையும், பேரரசுகளையும் நியமித்து வெற்றிக்கண்ட மனிதன், தனிமனித நலனை மேம்படுத்த முயற்சிக்கவில்லை’ என்றும் முடித்திருப்பார். அறிவியலாளர், பேராசிரியர் ஷனா ஸ்வானின் ‘கவுண்டவுன்’ (Count Down) புத்தகத்தை வாசித்து முடிக்கையில் ஹராரி கூறுவது நிச்சயம் நினைவுக்கு வருகிறது. மனிதகுலத்தின் இருப்பு இன்னும் …

Continue reading “கட்டுரை”

  • மொழிபெயர்ப்புகள்

சுவா்களின் ஊடே- Etger keret

February 24, 2018 / thuyan / 0 Comments

சுவா்களின் ஊடே அவள், ஏமாற்றத்துடனும் பாதிக் குழப்பமாகவும் தெளிவற்ற பார்வையிலிருந்தாள். யாரோ அவளுக்காக தவறுதலாக ஆடையகற்றாத பாலை வாங்கிவந்ததுபோலவும் அது, அவளுக்கு எதுவும் செய்யாதது போலவும். ”இது உண்மையில் நன்றாக இருக்கிறது” கள்ளிச்செடியை அறையின் மூலையைில் வைத்தபடி சொன்னாள். பிறகு என்னிடம் ”கவனி. யோவ், உன் மனதில் என்ன இருக்கிறதென்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் யாருடன் இங்கு இருக்கிறேனெ்பதை நீ தெரிந்துகொள்ளது எனக்கு முக்கியமானதுதான்” என்னுடைய காதலி மிகவும் அழகாக இருக்க வேண்டுமென நினைத்ததுண்டு. அவள் …

Continue reading “சுவா்களின் ஊடே- Etger keret”

  • மொழிபெயர்ப்புகள்

நடைபாதை- Etger keret

February 24, 2018 / thuyan / 0 Comments

பாதை எட்கர் கரிட் எப்போதும் போல ஒருவாரம் கழித்துதான் நான் வந்து சேர்ந்தேன். ஒருபோதும் சரியானத் தேதியில் வந்ததில்லை. முதல் நினைவுதினத்திற்கு வந்தபோது அங்கிருந்த அனைவரும் வெறித்தவாறும் துக்கத்தில் பங்கெடுத்துக்கொண்டும் நின்றார்கள். அம்மா கண்ணீருடன் என்னைப் பார்த்தவள், புன்னகைத்து நான் எப்போது படிப்பை முடிக்கப் போகிறெனெனக் கேட்டாள். நான் அதை வெறுப்தாகச் சொன்னேன். எவ்வகையிலும் அந்த நினைவுதினம் என் ஞாபகத்துக்கு வருவதில்லை, அது எளிதாக நினைவுபடுத்தக்கூடியதாக இருந்த போதிலுமே. டிசம்பர்  12 பன்னிரெண்டாவது மாதத்தில் பன்னிரெண்டாம் தேதி. …

Continue reading “நடைபாதை- Etger keret”

Posts navigation

1 2 … 4 Next

Recent Posts

  • மூளை எனும் காலனிய அரசு
  • (no title)
  • இருமுனை
  • பெருந்தேவி கவிதைகள்
  • டார்வினின் வால்

Recent Comments

  • சா.ரு.மணிவில்லன். on ஓநாய் குலச்சின்னம் – அழிந்த தொன்மை கலாச்சாரத்தின் சிற்பம்..
  • தூயனின் இரு கதைகள் – கடலூர் சீனு on முகம்
  • SHAN Nalliah on இன்னொருவன்

Archives

  • October 2022
  • September 2022
  • December 2021
  • February 2018
  • December 2017
  • November 2017

Categories

  • கட்டுரைகள்
  • குறுநாவல்
  • சிறுகதைகள்
  • புத்தகங்கள்
  • மதிப்புரைகள்
  • மொழிபெயர்ப்புகள்

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Theme by The WP Club | Proudly powered by WordPress