Author: thuyan
இன்னொருவன் அமிர்தி ராஷன், அதுதான் அவனுடைய சரியான பெயர். ஆனால் எனக்கும் மேன்சனிலிருந்த எல்லோருக்கும் அமிட்டிராஸ் என்றுதான் அப்பெயர் வாயில் நுழைந்திருந்தது. அவன் ‘காணாமல்போவதற்கு’ முதல் நாள் தமிழ்நாட்டிற்கு இரயிலேறியிருக்கிறான். அவனைத் தவிர தன் ஊரிலுள்ள அனைவரும் அவன், காணாமல் போனதாகவே நம்பிக்கொண்டிருப்பதாகச் சொல்வான். “வழி தவறுதல் மட்டுமே காணாமல் போவதாக இங்கு நம்பப்படுகிறது. ஆனால் காணாமல் போவது ஓரு நித்ய யோகநிலை. உன்னோட இடத்தை நீ வெற்றிடமாக்கிவிட்டு வேறொரு இடத்துக்குப் போகும்போது கிடைக்கின்ற தனிமை அபூர்வமானது. …
பிரக்ஞைக்கு அப்பால்…. ஓவியர் ஹரிதாஸை சித்தனவாசலில் சந்திக்கும்வரை ஆத்மநாமைப் பற்றி நான் எங்கும் கேள்விப்பட்டிருக்கவில்லை. அப்பெயரையே அன்றுதான் எனக்கு பரிட்சயம். ஓவியங்களுடனான என் துவந்தமும் அன்றிலிருந்தே துவங்கியது. இன்று, இந்திய ஓவியர்களின் அகவுலகம் சார்ந்து திரட்டப்பட்ட என் ஆராய்ச்சி நூலுக்கான உந்துதல் அச்சந்திப்பில்தான் முகிழ்ந்தது. தொண்ணுற்றியாறில் சித்தனவாசல் இப்போது நீங்கள் பார்ப்பதுபோல கருவேல மரங்கள் சூழ்ந்த வனமாகவும் கிரஷர் லாரிகளின் ஓயாத இரைச்சலினூடே ஒரு முள்ளெலி போல தன்னை ஒடுங்கிக் கொண்டிருக்கவில்லை. வில்வ மரங்களும் பொருசியும் மண்டிய …
எஞ்சுதல் காய்ந்த மருதாணியை உடையாமல் எடுக்க வேண்டுமென்கிற ஆட்டத்தில் நீலா மூன்றாவது முறையாகத் தோற்றபோது மஞ்சு செல்லமாக உதட்டைச் சுழித்துக் காட்டினாள். அவள் செல்லச் சிணுங்கலோடு கடைசி விரலிலிருந்த மருதாணித்தொப்பியைப் பதற்றத்துடன் உருவிக்கொண்டிருந்தாள். விரல்களின் சிவப்பு முகங்கள் மஞ்சுவிற்கு பரவமூட்டின. மெகந்தி கூம்புகளை அவள் எப்போதும் விரும்பியதில்லை. மருதாணியிலைகளில் மட்டுமே அந்தரங்க மணமிருப்பதாக உணர்ந்தாள். பச்சை வாசனையை நுகர்ந்துவிட ஆசை எழுந்தும் நீலாவின் ஆட்டம் முடிவதற்காகக் காத்திருந்தாள். இம்முறை செம்பருத்தி சிவப்பு. போனமுறை கருஞ்சிவப்பாகச் சிவந்திருந்தது. கரிய …
முகம் மிக அருகே பன்றியின் முகத்தைப் பார்த்தேன். அதன் கரிய உடம்பில் சாக்கடை நீர்ச் சொட்ட, கொழுத்த வயிற்றில் முலைகாம்பு வரிசை தரையில் உரசியபடி, கருத்த கூம்புமூக்கைத் தூக்கி உறிஞ்சிவிட்டு என்னைப் பார்த்தது. சுருங்கி விரிந்த நாசித்துளைகளில் ஈரம் மினுமினுத்தது. தூக்கம் இல்லை. கண்களை மூடியபடிதான் படுத்திருந்தேன். பின்தொடரும் இக்காட்சி என்னை வெறியூட்டிக்கொண்டே இருக்கிறது. எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தேன். வெயில் சுவரில் இறங்கியிருந்தது. வாயோரம் வழிந்திருந்த எச்சிலைத் தோள்பட்டையில் துடைத்துக்கொண்டு எழுந்தபோது லுங்கியிலிருந்து செல்போன் பாயில் விழுந்தது. …
பேராழத்தில் மாலை சூரியன் மறைந்த பின்பும் இருள் முழுமையாகக் கவியாமல் இருந்தது. கொன்றை மரங்களின் உச்சிக்கிளைகளில் துண்டு மேகங்கள் போல கொக்குகள் அமர்ந்து ‘கிலாவ் கிலாவ்’என எழுப்பும் ஒலி அவ்விடமெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அம்மரங்களுக்கு அப்பால் கருமை பரப்பில் சூரியன் அஸ்தமித்ததன் எச்சம் பரவியிருந்தது. சிற்பி வேதசாதகர் மெதுவாக ஆற்றின் கரையோரம் வந்து நின்றார். ஆறு, மென் கொதிப்புடன் செல்வதுபோல் இருந்தது. அதன் சாம்பல் நிறத்தினை உற்றுநோக்கிய வண்ணம் மெதுவாக இறங்கினார். கால்கள் சில்லிட்டு நடுங்கின. உள்ளங்கையில் …
இரு-முனை வெளியே வெகுநேரமாக நாய் குரைத்துக்கொண்டேயிருப்பது அவனுக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. அது தன் வாழ்நாளின் மொத்த இ;ழப்பையும் வெளித்தள்ளுவதற்காக வாய் பிளந்து கத்திக்கொண்டிருக்கிறதென எண்ணினான். தான் வளர்ந்த வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, சமீபத்தில்தான் அவன் வீட்டின் காம்பவுண்டடின் கீழ் தன் இருப்பை நிறுவி விட்டிருந்தது. வளர்த்தவர்கள் அணிவித்திருந்த கழுத்து பெல்ட் மட்டும் மிச்சம். அதையும் கடித்துத் துப்பிவிட முன்னங்கால்களால் எப்படியாயினும் முயன்று தோற்றுää ஆகாயவெளியை அண்ணாந்து குரைத்துக்கொண்டிருக்கிறது. அந்த நாய்க்கும் தன்னிடமுள்ள மாத்திரைகள் ஏதேனும் கொடுத்து அவ்வெறுமையை …
குறுநாவல் ஒற்றைக்கைத் துலையன் 1 தேவிசமுத்திரம் வனபத்ரகாளி கோவிலிலிருந்து திரும்பும்போது மழை நன்றாக பிடித்திருந்தது. கனத்த இருள் கவிந்திருந்ததில் தடம் புலப்படவில்லை. அம்மா என் கையைப் பிடித்துக்கொண்டாள். அவள் உள்ளங்கை சில்லிட்டிருந்தது. வேகமாக நடக்க ஆரம்பித்தோம். அம்மா நெற்றியிலிருந்து குங்குமம் கரைந்து மூக்கின் மேல் வழிவது இருளிலும் நன்றாகத் தெரிந்தது. காளி கோவிலுக்குப் போய் வரும்போதெல்லாம் அவள் நடையில் ஒரு வீரம் வந்துவிடும். அம்மாவின் தோள் உயரத்திற்கு நான் வளர்ந்துவிட்ட சந்தோஷம் அக்கணத்திலும் என்னைத் துரத்திக்கொண்டே வருவதை …
வெண்ணிறப் புழுக்கள் 1 கொடிவேரி அணையில் பவானியின் இரைச்சல் மிகத்துல்லியமாகக் கேட்டது. இரவில் எப்போதுமே அவ்விரைச்சல் கொஞ்சம் கொஞ்சமாக் மெல்ல உயர்ந்தெழுவது போல் இருக்கும். “பவானிக்கு கோவம் வந்தால் ஊரைச் சுருட்டி வாயில போட்டு போய்டுவாள்” என்றார் சங்கரன் மாமா. அணையைக் கட்டிய கொங்கள்வான் கதையை இங்கிலிஷ் படங்களைப் போல சொல்லத் தொடங்கினார். பெரும்படை திரட்டி குதிரையில் வந்திறங்கிய கொங்கள்வான், புலிகளை வேட்டையாடி குதிரையில் இழுத்துக்கொண்டு போனான் என்றார். கொங்கள்வானிற்கு பணியாத குறுமன்னர்கள் அணையை கொம்பன் யானைகளைக்கொண்டு …