ஜீவகரிகாலனின் ‘ட்ரங்கு பெட்டிக் கதைகள்’- விமர்சகனின் பார்வை சிறுகதைக்கென்ற செவ்வியல் வடிவம் ஒன்றை நம் இலக்கிய மரபு உருவாக்கிவிட்டிருக்கிறதென்பதால் இங்கு எழுதப்படும் கதைகள் அதனுள் தான் தன் ஆகிருதியை நிரூபிக்க வேண்டியுள்ளது. எப்படியோ அவ்வடிவ குறுக்கீடும் படைப்பாளிக்கு சவாலையே அளிக்கிறது. இது வாசகனுக்கும் ஒருவகையில் வசதித்தன்மை. ஆக படைப்பாளி, வாசகன் என இருவரும் ஆடும் செஸ் விளையாட்டாகச் சிறுகதையைக் குறிப்பிடலாம். செஸ் விளையாட்டை உதாரணமாக எடுத்துக்கொள்வதுதான் தற்போதைக்கு சரியானது என்று நம்புகிறேன். எதிரே அமர்ந்திருப்பவனின் எண்ணங்களை கிரகித்துக்கொண்டு …
இறந்துபோன நிலங்கள் சொல்லும் அந்நிலங்களின் கதை பா. வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’ குறித்த விமர்சனம்.….. மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே அவனின் நிலத்திற்கான வரலாறும் தொடங்கிவிடுகிறது. ஒவ்வொரு சமூகமும் தோன்றுவதும் அவை தங்களுக்கு ஆதாரமான இருப்பை அமைத்துக்கொள்வதும் நிகழ்ந்துகொண்டேயிருக்கும் காலமாற்றங்கிளிலொன்று. ஆதியிலிருந்து மனிதன் தனக்கு தேவையானவற்றை தன் அடிமைத்தனத்திற்குள் கொண்டுவருவதும் அல்லது அதனை அழித்தொதுக்குவதையும் செய்ய முனைகிறான். பின் கொஞ்சம் கொஞ்சமாக அவன் சமூகளவில் பரிணாமம் அடையப்பெற்று பிறகு அவனின் சிந்தனையிலும் மாறுபாடு அடைகிறான். அதன்பின் மன்னராட்சி, நிலபிரபுத்துவம், …
ஜே.ஜே சில குறிப்புகள் – வாசிப்பனுவம் தமிழில் முதல் நவீனத்துவம் என்ற சிறப்புக்குரிய இந்நாவல் வெளிவந்தது 1981 ம் ஆண்டு. இன்று முப்பத்தைந்தாண்டுகள் கடந்து விட்ட பின்பும் இதைப் பற்றி பேசிக்கொண்டிருப்பது ஒரு தவம் போன்றுள்ளது. நாவல் முழுக்கவே பேசப்படுவது தனி மனிதவாதத் தத்துவம். அது ஜே ஜே என்கிற பெயரில் சு.ராவின் சிந்தனையா அல்லது சி.ஜே தாமிஸின் (இங்கு சி.ஜே தான் ஜே ஜே என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது) சிந்தனையா என்ற தேடல் தீவிர இலக்கிய படித்தவர்களுக்குள் …
ஓநாய் குலச்சின்னம் – அழிந்த தொன்மை கலாச்சாரத்தின் சிற்பம்.. ஜியாங் ரோங்கின் ஓநாய் குலச்சின்னம் வாசிப்பதற்கு புதிய தரிசனத்தை திறந்துவிடக்கூடிய நாவல். தமிழில் சி. மோகன் மொழிபெயர்ப்பில் அதிர்வு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சீனாவில் மங்கோலிய மேய்ச்சல் நிலத்தின் சிதைவை ஆழ் மனதில் காட்டி அழிக்கின்றது. ஜியாங் ரோங்கின் முதல் நாவல். தன்னுடைய அறுபதாவது வயதில் இந்நாவலை படைத்துள்ளார். ஆனால் அதற்கு முன் தன் வாழ்நாள் முழுவதும் இதற்காக செலவிட்டுள்ளார். சீனாவில் உள் மங்கோலியாவின் கிழக்கு உஜ்ம்கியுன் பேனரில் …
Continue reading “ஓநாய் குலச்சின்னம் – அழிந்த தொன்மை கலாச்சாரத்தின் சிற்பம்..”
பெருநகரத்தின் குரூர முகம் வா. மணிகண்டனின் மூன்றாம் நதி நாவல் குறித்து ‘எந்த அயோக்கியன நம்பினா மேல்? தண்ணிக்காக ஊரையே பறக்க அடிச்சிட்டீங்’ –அசோகமித்திரனின் தண்ணீர் நாவலிலிருந்து பெருநாவல்கள் மட்டுமே வாசிப்பின் எல்லைகளையும் மனிதின் சித்திரங்களையும் கொடுக்குமென்றால் சிறிய நாவல்களிலும் அத்தகைய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. பக்க அளவில் ஒரு படைப்பபை பிரக்ஞை பூர்வமாக எதிர்கொள்வதில் சிக்கல்கள் இருக்கின்றன. டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ போன்ற நாவல்களை வாசிக்கின்ற அதே உத்வேகம் தான் ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’வையும் வாசிக்கின்றபோது …
Continue reading “வா. மணிகண்டனின் மூன்றாம் நதி நாவல் குறித்து”
இன்னொருவன் அமிர்தி ராஷன், அதுதான் அவனுடைய சரியான பெயர். ஆனால் எனக்கும் மேன்சனிலிருந்த எல்லோருக்கும் அமிட்டிராஸ் என்றுதான் அப்பெயர் வாயில் நுழைந்திருந்தது. அவன் ‘காணாமல்போவதற்கு’ முதல் நாள் தமிழ்நாட்டிற்கு இரயிலேறியிருக்கிறான். அவனைத் தவிர தன் ஊரிலுள்ள அனைவரும் அவன், காணாமல் போனதாகவே நம்பிக்கொண்டிருப்பதாகச் சொல்வான். “வழி தவறுதல் மட்டுமே காணாமல் போவதாக இங்கு நம்பப்படுகிறது. ஆனால் காணாமல் போவது ஓரு நித்ய யோகநிலை. உன்னோட இடத்தை நீ வெற்றிடமாக்கிவிட்டு வேறொரு இடத்துக்குப் போகும்போது கிடைக்கின்ற தனிமை அபூர்வமானது. …
பிரக்ஞைக்கு அப்பால்…. ஓவியர் ஹரிதாஸை சித்தனவாசலில் சந்திக்கும்வரை ஆத்மநாமைப் பற்றி நான் எங்கும் கேள்விப்பட்டிருக்கவில்லை. அப்பெயரையே அன்றுதான் எனக்கு பரிட்சயம். ஓவியங்களுடனான என் துவந்தமும் அன்றிலிருந்தே துவங்கியது. இன்று, இந்திய ஓவியர்களின் அகவுலகம் சார்ந்து திரட்டப்பட்ட என் ஆராய்ச்சி நூலுக்கான உந்துதல் அச்சந்திப்பில்தான் முகிழ்ந்தது. தொண்ணுற்றியாறில் சித்தனவாசல் இப்போது நீங்கள் பார்ப்பதுபோல கருவேல மரங்கள் சூழ்ந்த வனமாகவும் கிரஷர் லாரிகளின் ஓயாத இரைச்சலினூடே ஒரு முள்ளெலி போல தன்னை ஒடுங்கிக் கொண்டிருக்கவில்லை. வில்வ மரங்களும் பொருசியும் மண்டிய …
எஞ்சுதல் காய்ந்த மருதாணியை உடையாமல் எடுக்க வேண்டுமென்கிற ஆட்டத்தில் நீலா மூன்றாவது முறையாகத் தோற்றபோது மஞ்சு செல்லமாக உதட்டைச் சுழித்துக் காட்டினாள். அவள் செல்லச் சிணுங்கலோடு கடைசி விரலிலிருந்த மருதாணித்தொப்பியைப் பதற்றத்துடன் உருவிக்கொண்டிருந்தாள். விரல்களின் சிவப்பு முகங்கள் மஞ்சுவிற்கு பரவமூட்டின. மெகந்தி கூம்புகளை அவள் எப்போதும் விரும்பியதில்லை. மருதாணியிலைகளில் மட்டுமே அந்தரங்க மணமிருப்பதாக உணர்ந்தாள். பச்சை வாசனையை நுகர்ந்துவிட ஆசை எழுந்தும் நீலாவின் ஆட்டம் முடிவதற்காகக் காத்திருந்தாள். இம்முறை செம்பருத்தி சிவப்பு. போனமுறை கருஞ்சிவப்பாகச் சிவந்திருந்தது. கரிய …
முகம் மிக அருகே பன்றியின் முகத்தைப் பார்த்தேன். அதன் கரிய உடம்பில் சாக்கடை நீர்ச் சொட்ட, கொழுத்த வயிற்றில் முலைகாம்பு வரிசை தரையில் உரசியபடி, கருத்த கூம்புமூக்கைத் தூக்கி உறிஞ்சிவிட்டு என்னைப் பார்த்தது. சுருங்கி விரிந்த நாசித்துளைகளில் ஈரம் மினுமினுத்தது. தூக்கம் இல்லை. கண்களை மூடியபடிதான் படுத்திருந்தேன். பின்தொடரும் இக்காட்சி என்னை வெறியூட்டிக்கொண்டே இருக்கிறது. எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தேன். வெயில் சுவரில் இறங்கியிருந்தது. வாயோரம் வழிந்திருந்த எச்சிலைத் தோள்பட்டையில் துடைத்துக்கொண்டு எழுந்தபோது லுங்கியிலிருந்து செல்போன் பாயில் விழுந்தது. …
பேராழத்தில் மாலை சூரியன் மறைந்த பின்பும் இருள் முழுமையாகக் கவியாமல் இருந்தது. கொன்றை மரங்களின் உச்சிக்கிளைகளில் துண்டு மேகங்கள் போல கொக்குகள் அமர்ந்து ‘கிலாவ் கிலாவ்’என எழுப்பும் ஒலி அவ்விடமெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அம்மரங்களுக்கு அப்பால் கருமை பரப்பில் சூரியன் அஸ்தமித்ததன் எச்சம் பரவியிருந்தது. சிற்பி வேதசாதகர் மெதுவாக ஆற்றின் கரையோரம் வந்து நின்றார். ஆறு, மென் கொதிப்புடன் செல்வதுபோல் இருந்தது. அதன் சாம்பல் நிறத்தினை உற்றுநோக்கிய வண்ணம் மெதுவாக இறங்கினார். கால்கள் சில்லிட்டு நடுங்கின. உள்ளங்கையில் …