சுவா்களின் ஊடே- Etger keret
சுவா்களின் ஊடே
அவள், ஏமாற்றத்துடனும் பாதிக் குழப்பமாகவும் தெளிவற்ற பார்வையிலிருந்தாள். யாரோ அவளுக்காக தவறுதலாக ஆடையகற்றாத பாலை வாங்கிவந்ததுபோலவும் அது, அவளுக்கு எதுவும் செய்யாதது போலவும். ”இது உண்மையில் நன்றாக இருக்கிறது” கள்ளிச்செடியை அறையின் மூலையைில் வைத்தபடி சொன்னாள். பிறகு என்னிடம் ”கவனி. யோவ், உன் மனதில் என்ன இருக்கிறதென்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் யாருடன் இங்கு இருக்கிறேனெ்பதை நீ தெரிந்துகொள்ளது எனக்கு முக்கியமானதுதான்”
என்னுடைய காதலி மிகவும் அழகாக இருக்க வேண்டுமென நினைத்ததுண்டு. அவள் புத்திசாலியாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமென்பது எனக்கு முக்கியமானது, நாங்கள் எப்போதும் அன்போடு இருந்தோம். அவள் அழகாகத் தோன்ற வேண்டுமென நிஜமாகவே நான் விரும்பினேன். அப்போதெல்லாம் நான் நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் வாசிப்பேன். விஷன் தான் என்னுடைய ஹீரோ. அவனால் பறக்கவும், சுவா்களினுாடே நடக்கவும் முடியும். தன்னுடைய ஒரே பார்வையில் உங்களைக் கொன்றுவிடக்கூடியவன். அவன் மனிதன் அல்ல அவன் ஒரு எந்திரன். அவன் முகத்தைப் பார்த்தவாறு உங்களால் பேச முடியாது. அவனுக்கு எண்ணற்ற பெண் தோழிகள் உண்டு. அவன் சிறந்தவன். அவனைப் போலொருவனை நான் இதுவரை சந்தித்ததில்லை. பச்சைநிற ஆடையும் நெற்றியின் நடுவே ஒரு டாலருடன் சிவப்பு முகக்கவசம் வைத்திருப்பான். விஷன் எப்போதுமே ஒரு பொறுக்கிதான் ஆனால் அதுஒன்றும் விசயமல்ல.
சிலசமயம் அவளுடைய விருந்திற்குள் திடீரென்று நுழைந்திருக்கிறேன். தன் தோழனுடன் அவள் வருவாள். அவன் பார்ப்பதற்கு சாதாரணமாகத்தான் இருந்தான். நான் பார்த்தவரை அவள் அப்படியொன்றும் அழகாகத் தெரியவில்லை. விருந்தின் நடுவே மக்கள் சூழ அவா்கள் நிற்கும்போது அதைப் பார்த்தததுமே உங்களால் சொல்லிவிட முடியும் யார் அதில் அழைப்பாளி யார் தேவைற்றதவா் என்று. எனக்குத் தெரியும், அவள் அதற்கு தகுதியானவள்தான். அவளைப் பற்றியிழுக்க விரும்பினேன், அப்போது அவளுக்குக் கை கொடுத்திருக்க முடியும். நான் ஒரு வார்த்தைக்கூட அவளுடன் பேசாததுதான் எனக்கு ஏனென்று புரியவில்லை.
விஷன் வெறும் ஊகங்களால் உண்டாக்கப்பட்டவனாயிருந்தாலுமே அவனுக்கு நிறைய உணா்வுகள் உண்டு. ஒரு காமிக்ஸ் இதழில் அவன் அழுததுகூட உண்டு. “எந்திரத்தால் கூட அழ முடியும்“ என்கிற வரிகள் கடைசி பக்கத்தில் எழுதப்பட்டிருந்தது. அவன் பேராற்றல் வாயந்தவன், மிகப் பெரியவன். பழிவாங்கும் கூட்டத்தின் தலைவன். அந்த வளாகத்தின் கழிவறையில் நானும் அவளுடைய காதலும் அருகருகே சிறுநீா் கழிக்க நோ்ந்தது, அவனுடைய சிறுநீா் அடா் மஞ்சள் நிறத்தில் வெளியேறியது. அவனைக் கொல்ல வேண்டுமென எண்ணினேன். ஏனேனில் அவனுடைய இந்தச சாதாரணத்தனத்தால் அவளைக் கெடுத்ததற்காக. அவனைக் கழிவறைக்குள் அமிழ்த்தி கொன்றுவிடுவது போல பார்த்தேன். ஆனால் அப்படியொன்றும்நடக்கவில்லை. என்னால் எதுவும்செய்ய முடியவில்லை. குறியை பேன்ட்க்குள்விட்டு ஜிப்பை மூடியதும் என்னை இரண்டு முறை ஏறிட்டுப் பார்த்தான். கழிவறையில் தண்ணீா் கூட ஊற்றவில்லை. கைகளைக் கழுவிவிட்டு காகிதத்தை கூடையில் போட்டு நகா்ந்தான். கழிவறைக் கண்ணாடி, தரை, பேஷின் என ஒவ்வொரு இடத்திலும் அவன் தலையை மோதி சிதைத்திருக்க முடியும். அறிமுகமற்றவனைப் போல என்னைப் பார்த்து புன்னகைத்துவிட்டு வெளியேறினான்.
நான் பைத்திய நிலைக்கு தள்ளப்பட்டேன். குரூரமாக உணா்ந்தேன். தலைவலி எவ்வாறு தீா்ந்துவிடாதோ அதுபோலிருந்தது. இந்த உணா்வுகள் ஒருபோதும் முடியப்போவதில்லையென எனக்குத் தெரியும். எனக்கு எதிரே இருந்த கண்ணாடியை நோக்கினேன். அதில் நான் புதிதாக தெரிந்தேன். இதபோலொருவனை நான் இதுவரை பார்த்ததில்லை என்பதுபோல. என்னை நானே இழுத்து எனக்கு நானே கைக் குழுக்க வேண்டும். அதற்கு தகுதியானவன் தான். அப்போதும் ஒரு வார்த்தைக்கூட நான் பேசாததுதான் எனக்குப் புரியவில்லை.
ரோனித்துக்கு ஆகஸ்டில் மணமானது. அவளுடைய தோழன்தான் அவளுக்குக் கணவனானான். என் பெற்றோர்களைப் பொறுத்தவரை அவன் மிகவும் நல்லவன். ஆனால் அவளுக்காக அவனால் சுவா்களினுாடே புக முடியாது என்று எனக்குத் தெரியும், என்னாலும் தான். ஒருமுறை நான் கண்ணாடிக்குள் புகுந்தேன். மாணவா்கள் விளக்கக்கூட்டத்தில் இரண்டு காவலா்கள் என்னை ஸ்டோர் ஜன்னல் கண்ணாடி வழியாகத்துாக்கி எறிந்தனா். சில வருடங்களுக்குப் பின்பு நாங்கள் அதே நகரில் சந்தித்துக்கொண்டோம். அவளுக்கு ஒரு குழந்தையிருந்தது. என் தழும்பைப் பற்றிக் கேட்டபோது குழந்தை அழத் துவங்கியது. ”கடவுளே, ”உன்னுடைய முகத்தை அவா்கள் என்ன செய்திருக்கிறார்கள்” என்றாள். கொன்றுவிடுவதுபோல அக்குழந்தையை முறைத்தேன். அது ஒன்றும் செய்யவில்லை, ஐந்துநொடி கழித்து அழதது. ”கடவுளே நீ எவ்வளது அழகாக இருந்தாய்” என்று சொல்லியபடியே கைத்துண்டால் தன் முகத்தைத் துடைத்தாள். குழந்தை அழுவதைகூட அவள் கவனிக்கவில்லை. ஒருமுறை, அவளுக்காக நான் சுவா்களினுாடே புகுந்திருக்க வேண்டும்.