‘பாகீரதியின் மதியம்’ நாவல் ஓா் உளப்பகுப்பாய்வில்…..
பா. வெங்கடேசனின் பாகீரதியின் மதியம் நாவல் மீதான வாசகனின் உளப்பகுப்பாய்வு பார்வை
பெரும் வனத்தினுள்ளே நான் பயணிக்கிறேன். முதலில் எனக்கு எவ்வித பாதையுமே புலப்படவில்லை. நானாக எனக்கு உகந்தவகையில் ஒரு பாதையொன்றை உருவாக்கி நடக்க முயல்கிறேன். இப்போது பாதை என்னை அழைத்து செல்கிறது. அதற்கு நான் செல்லும் திசை தெரியாது ஆனால் வழி என்கிற தூல ஒன்றைக் எனக்க காட்ட வேண்டுமென்கிற கட்டாயம் மட்டும் அதற்கு உண்டு. ஆனால் நான் பாதையின் வழியில் செல்ல மறுத்து புதிய வழித்தடத்தை மறுபடியும் உருவாக்க முயற்சிக்கிறேன். என்னுடைய பழையப் பாதையிலிருந்து விலகி வேறொன்றைப் பிடித்து பயணிக்கிறேன். இதுவும் பழையதைப் போன்று என்னை அதன் வசதிக்குகந்தவாறு அழைக்க முற்பட்டதும் நான் இன்னொன்றை மறுபடியும் உருவாக்குகிறேன். இப்படி தொடங்கிய என்னுடையப் பயணம் என் தேடலின் கடைசி புள்ளியான அவ்வனத்திற்குள்ளிருக்கும் அழகான குன்றில் போய் முடிகிறது. ஆனால் அங்கு என்னுடைய பாதைகள் அனைத்தும் பாம்பு போல அமைதியாக வந்து கிடப்பதைக் பார்க்கிறேன். எப்படியோ நான் அடைந்த மலைக்குன்றில் மீது ஏறி அமர்ந்து ஆசவாசமடையும் போது. என் முன் நான் தற்பொழுது இருப்பது போலவே இன்னும் சில குன்றுகள் தென்படுகின்றன.
பா.வெங்கடேசனின் பாகீரதியின் மதியம் நாவலை வாசிக்கத் தொடங்கும் ஒரு வாசகனுக்கு அது முதலில் ஒரு இடத்தைக் கொடுத்து அமரச் செய்து ஆசுவாசப்படுத்திவிடும். பிறகு அவனின் பயணத்திற்கு அதுவே பாதைகளை அமைத்து அவன் கரம் தொட்டு அழைத்து செல்வதோடு அவன் தேடி வந்தது போன்று இருக்கின்ற பல்வேறு நிலப்பரப்புகளையும் மலைகளையும் அவனுக்க காட்டிவிட்டு விலகி நின்று விடும்.
மேற்சொன்ன கதை மூலமாகத்தான் இந்நாவலுக்குள் ஊடுறுவ யத்தனித்திருக்கிறேன். இந்நாவல் 1974ம் வருடம் செப்டம்பர் 17ம்நாள் ஈவேராவின் தொன்னிற்றைந்தாவது பிறந்தாநாளையொட்டி நடக்கும் பொதுக்கூட்டதில் தொடங்குவதாக பிரதியில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் உன்மையில் இந்நாவல் தொடங்குமிடம் அரங்கநாதன் நம்பி என்கிற மனநல மருத்துவர் தன் ஆதர்ச கதாநாயகனான டிராகுலாவிடம் கூறும் கதைதான் இப்பிரதியில் நமக்கு கதையாக சொல்லப்படுகிறது என்றும் வைத்துக்கொள்ளலாம். பாகீரதியென்கிற பெண்ணைத் தேடியலையும் மனிதன் தன்னைப் போன்றே இருக்கின்ற கதாப்பாத்திரமான நோஸ்பெராட்டின் கதாநாயகனான டிராகுலாவிடம் கூறும் கதைதான் இந்த நாவலில் இருக்கும் கதைளிலிருக்கும் பிரதான கதை. பின் மீதம்? அது இந்த பிரதிக்கு இருக்கும் இன்னொரு வாசல். அவ்வழியே நுழைந்தால் இன்னொரு கதைசொல்லியை இங்கு கொடுக்கலாம். ஆனால் இக்கட்டுரைக்கு ஒரு வாசலை மட்டுமே நான் இங்கு திறந்துவிடுகிறேன். அது அரங்கநாதன் நம்பி டிராகுலாவுக்குச் சொல்கிற கதை.
திருமணமாகி வீட்டில் இருக்கின்ற பெண்களுக்கென சில சிறப்பு குணவிஷேசங்களில் மதியத்தூக்கமும் ஒன்று. துரதிஷ்டவசமாக பெண் எப்பொழுதுமே எதனுடனோ தன்னை இனணத்துக்கொள்கிறாள் அல்லது எதையாவது தனக்கு துணையாக வைத்துக்கொண்டே இருக்கிறாள். அவளுடைய சுதந்திரமான உலகம் அவளுக்கு கிடைப்பதில்லை. எனவே பெண் தன் இருப்பை சுதந்திரமாக உலவவிட ஒரு தனிமையைத் தேடுகிறாள். அது ஒருவகையில் தூக்கமாக இருக்கிறது. அதிலும் மதியத்தூக்கம் மட்டுமே தன்னிருப்பை யாரும் தீண்டாதவாறு கூட்டிற்குள் உறங்கும் ஆமையாக வைத்திருக்கிறது. ‘இரவு பெண்ணைத் தாசியாக்குகிறது, புலர்வு மனைவியாக்குகிறது, அந்தி தாயாக்குகிறது, கருக்கல் கோழையாக்குகிறது, மதியம் மட்டுமே பெண் பெண்ணாக இருக்கிறாள்’ (பக் 631) அப்படித்தான் பாகீரதி தன் வாழ்வின் .நிறைவுறாத அல்லது பிரக்ஞைக்கப்பால் உள்ளவற்றை தன் அந்தரங்கவுறக்கத்தின் வழியே கனவாக மீட்டெடுக்கிறாள்.
இப்படித்தான் இக்கதையில் வரும் பாகீரதியும் மதியத்தூக்கத்தில் தன்னை ஒளித்துக்கொள்பவள். ஒருகட்டத்தில் பாகீரதியின் மதியக்கனவு வளர்ந்து கனவெது நினைவெது என குழப்பிக்கொண்டு அச்சுழலுக்குள் அனைத்தையும் இழுத்துவிடுகிறது. மனைவியின் மனநிலையை சந்தேகித்த வாசுதேவன் மனநல மருத்துவரான அரங்கநாதன் நம்பியிடம் வந்துசேர்கிறான். இவர் தான் இந்நாவலை டிராகுலாவிடம்(நம்மிடம்) சொல்லும் கதைசொல்லி. நபக்கோவாவின் நாவலான லோலித்தா கதாப்பாத்திரம் ஹம்பர்ட் தன் பால்யவயது காதலியை அதே வயதில் இருபது வருடங்களுக்குப் பின் சுவிட்சர்லாந்தில் தன் வீட்டுக்காரப் பெண் ரூபத்தில் பார்ப்பது போல அரங்கநாதன் நம்பி வாசுதேவன் கொண்டுவரும் புகைப்படம் மூலம் தன் தவறவிட்ட காதலைக் காண்கிறான்.
இந்த நாவல் காதல் என்கிறவொன்றை, தான் கூறவிழையும் ஒன்றிற்கான தொனியாகப் பயன்படுத்தி சமூகம் சார்ந்த பிரக்ஞையைத் தான் எழுப்புகிறதேவொழிய காதலைச் சொல்வதற்காகத் தன்னை இவ்வளவு வற்புறுத்திக்கவில்லை. அதற்காக வாசுதேவன் என்கிற பிராமணனின் மனைவியான பாகீரதிக்கும் ஜெமினிக்குமிடையேயான(உறங்காப்புலி) காதல், அரங்கநாதன் நம்பிக்கும் பாகீரதிக்குமுள்ள காதல், விபின் பஸ்வானுக்கும் சவீதாவுக்குமானவை என ஒவ்வொரு சூழலுக்குகந்தவாறு காதல் என்கிற தொனியை துணைக்கழைத்துக்கொள்கிறது. அதற்காக இந்த தொனிகளையும் வாசகன் புறந்தள்ளிவிட முடியாதுதான். ஏனெனில் ஆசிரியர் தான் சொல்ல நினைக்கும் கதைக்காக உருவாக்கும் சில இணை கதைகள் தான் அந்த முதன்மைக் கதையை வாசகனின் பிரக்ஞைக்குள் செலுத்தும். மகத்தான பிரதியில் அந்த இணை கதைகளே(தொனி) இன்னொரு நாவலுக்கான கருவாகவும் தன்னுருவாக்கம் பெற்று மறைந்து கொண்டிருக்கவும் செய்யும். அப்படியான சொல்லப்படாத கதைகள் நிறைந்த பிரதியாக பாகீரதியின் மதியத்தை கூறலாம். இந்த நாவல் காதல், பெண்ணியம், கலை, இடதுசாரி வலதுசாரி மனோபாவம், பிராமண ஹரிஜன வர்க்க பிரிவு என பேசியிருக்கும் பல சிந்தனைகள் ஊடே வன அழிப்புக்குட்பட்டு தொழிற்மயமாக்கத்தில பாழ் படும் பழங்குடிகளில் வாழ்வையும் பேசியிருக்கிறது என்பதையும் இவ்விடம் சுட்டிக்காட்ட வேண்டியது ஒரு வாசகன் இப்பிரதிக்கு செய்யும் நியாயம். ஆக இது தான் இப்பிரதி சொல்லும் கதை என நான் முடிவுக்கு வரவில்லை மாறாக இதையும் பொருட்படுத்தலாமே என தரப்புகளை தருவதற்காக எழுதப்பட்டதே இக்கட்டுரை.
மேற்குவங்கத்திற்கும் வங்காளத்திற்கும் இடையே இருக்கும் பேராச்சாபா என்கிற கிராமத்து வாசிகள் அங்கு பழங்காலமாக இருக்கும் கூக் இனத்தவர்கள். அவர்கள் அங்கு ஓடும் பித்யாதரி ஆற்றையும் வனத்தையுமே தம் இருப்பாக கொண்டிருக்கின்றனர். பேராபுடீமா அவர்களின் தாய் தெய்வம். தொழிற்மயமாக்கமும் முதலாளித்துவ ஏகாதிபத்தியமும் அப்பழங்குடியினத்தவர்களை அங்கிருந்து அகற்ற ஆரம்பிக்கிற இன அழிப்பில் தான் இக்கதை நிகழ்கிறது. உண்மையில் இன்று பேராச்சபா கிராமத்தில் அப்படியொரு இனம் இருந்ததற்கான சுவடுமிருக்கப் போவதில்லை. இன்று இருக்கின்ற நகரங்களும் தொழிற்சாலைகளும் அவ்வினத்தவர்களின் அழிவெச்சத்தின் மீது தான் என்பதை மறுக்க முடியாது. பித்யாதரி நதிக்கரை இயற்கை வளங்களைக் கொண்டு செழித்தோடிக்கொண்டிருக்கிறது. அதன் கரைகளில் உருவாகும் சணல், சாயத் தொழிற்சாலைகளுக்கு பித்யாவின் வளம் அவசியமாகிறது. ஆதி இனத்தவர்களின் இருப்பு என்பது தூல வடிவில் அவர்கள் வணங்கும் தெய்வத்தின்மீதே அதிகமும் இருக்கும். அவர்களின் கூட்டு பிரக்ஞை அத்தெய்வத்தின் இடத்தசை; சுற்றிதான் இருக்கும். எனவே சமநிலை மனிதர்கள் முதலில் அவர்களின் பிரக்ஞையை களைப்பதிலேதான் பிரயத்தனங்களை காட்டுவார்கள். எனவே தான் பெரும் முதலாளிகள் தொழிற்சாலைப் பெருக்கத்திற்கான இடமான பித்யா நதிக்கரையிலிருந்து அவர்களை இடம் பெயரச் செய்ய முதலில் பேராபுடீமாவை கொண்டு வருகிறார்கள். நாவலில் இங்கள்ய்யாவிற்கும் வாசுதேவனுக்குமிடையேயான உரையாடலில் ‘இந்த உறங்காப்புலி அவளை(பேராபுடீமா) இடம் பெயர்ப்பது என்று சொல்லவில்லை. அப்புறப்படுத்துவது என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறான்.’ இப்படி வருகிறது. இந்த ‘அப்புறப்படுத்துவது’ என்ற வார்த்தைய பிரயோகிக்கும் உறங்காப்புலி சுயப்பிரக்ஞையுடனே தன் கருத்தை அங்கு சொல்வான். அதாவது நீங்கள்(கூக் சனம்) அப்புறப்படுத்தப்பட இருக்கிறீர்கள் என்பதே அதன் அர்த்தம்.
இந்த பிரதி விட்டுச்செல்லும் கதையாக இதுதான் இருக்கிறதா? சரி. இந்த பிரதி இதைத்தான் சொல்ல வந்ததா? அரங்கநாதன் நம்பி ட்ராகுலாவிடம் இக்கதைத்தான் சொல்கிறாரா? என்கிற கேள்விகள் ஒரு புறம் இருக்க. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். தொழில்மயமாக்கப் பெருக்கத்தில் இன அழிப்பு என்கிற ஒன்றை சொல்வதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.
சமூகத்திற்கெதிரான இக்குரலுக்காகத்தான் பெண்ணின் காதல் என்ற தொனியை இப்பிரதி பயன்படுத்துவதேன்? காரணம் இப்போதிருக்கும் நவீன கலாசாரம் தலித்தியம்ää பிராமணியம்ää பெண்ணியம் என எல்லாவற்றைம் பேசிப் பேசி இன்று சூழலில் அவை உழnஉசநயவ ஆக அதன் தீர்வுக்கு வந்துவிட்டது. அவற்றில் ‘திருமணமான பெண்களின் காதல்’ என்கிற இருப்பு சலனமற்று தன்னைத் தீண்டாதவாறு சூழலை தள்ளிவட்டு ஒதுங்கியிருக்கிறது. ஆனால் அந்த தொனியையுமே சமூகத்திற்கான இன்னொரு ளரிpழசவiஎந ஆகவும் மாறிää குரலாகவே ஒலிக்கிறது.
எந்தவொரு படைப்பும் ஒரு கருவுடன் தான் முதலில் உதிக்கிறது. பின் அது தன்னளவில் வளர்ந்து பெருகி அப்படைப்பாளனை தொந்தரவு செய்து தன்னை உருவாக்கிக் கொள்கிறது. இதுதான் எழுதப்பட்டப் பின்பு நாவலுக்கு அதன் அதிகபட்ச சாத்தியமாக இருக்க வேண்டும். இந்த மையத்தை, கருவைச் சொல்வே அந்த படைப்பாளனுக்கு அதையொத்த மற்ற கருவும் அல்லது தற்காலிக மையங்களும் தேவைப்படுகிறது. முதல் வாசிப்பில் :நுழையும் வாசகனுக்கு பிரதி தான் என்ன சொல்கிறேன் என்பதை அவனுக்கு புரியச் செய்வதில்லை அல்லது அவனால் புரிந்துகொள்ள முடிவதில்லை. இரண்டாம் வாசிப்பிலே அவனுக்கு லேசாக ஒரு மையம் புலப்படுகிறது. அப்போது அவன் தான் கண்டது சரிதானா? என கேள்வியெழுப்புகிறான். அப்படியானால் எதற்காக கதைசொல்லி, முதல் வாசிப்பில் தனக்கு ஏற்படுத்திய மையமும் அல்லது இதுவாகவும் இருக்கலாமென்று காட்டிய இன்னபிற மையங்களையும் புலப்படுத்தினார்? அந்த போலி மையங்கள் மீது அவனுக்கு ஏற்படும் தற்காலிக கோபம் பின் அந்த தான் கண்ட இன்னொரு(உண்மையான) மையத்துடன் சிந்திக்கின்றபோது அவையும் இதனுடன் ஏதோவொரு விதத்தில் இனைந்தேயிருந்திருக்கிறது என்பதையும் அவைதான் தான் இந்த மையத்தை உணர அரூபமாக உதவியிருக்கிறது என்பதையும் அறிகிறான். அந்த பிற மையங்களும் அவனுக்குள் எழுப்பிய கேள்விகள் வௌ;வேறு சிந்தனையையே ஏற்படுத்தியிருக்கின்றன என்றும் அதன் நிஜம் தானென்றும் முடிவுக்கு வரமுடிகிறது. சரி. இப்போது தான் கண்ட புதிய மையத்துடன் பினைந்திருக்கும் மற்ற இழைகளைத் தேடிப் பிடித்து அதனுடன் இனைத்துப்பார்க்க யத்தனம் செய்ய வேண்டும். அப்படித்தான் நானும் இந்த பாகீரதி நாவலை எதிர்கொண்டேன். இது ஒருவகையில் மகத்தான நாவல்களை எப்படி வாசிக்க வேண்டும் என்ற வசதியையும் எனக்கு உருவக்கித்தந்துள்ளது.
1. முதலில் இந்நாவல் திருமணமானப் பெண்ணின் காதலைத்தான் சொல்கிறது என்ற முன்முடிவுக்கு வந்த பின் அதனுடன் பினைந்திருக்கும்; மற்ற கதாப்பாத்திரங்களையும் சம்பவங்களையும் இணைத்துப் பார்க்கிறேன். அப்போது எனக்கு தொன்னூறு சதவீதம் தரவுகளில் திருப்தி உண்டானது விதிவிலக்காக பேரச்சாபா கதையைத் தவிர.
2. இரண்டாவது இது ஓவியம் சார்ந்தவொரு சிந்தனையை எழுப்புகிறாதா என்று யோசனையில் அது சம்பந்தமாக துழாவுகிறேன். ஏனெனில் மிதக்கும் வண்ணம் என்கிற உயிர் ஓவியத்தை ஜெமினி குறிப்பிடுவதும் கதையின் வரும் முக்கிய பாத்திரமான பாகீரதி ஓவியத்தின் மீது கொண்ட வேட்;கையும் உறங்காப்புலி அவளுக்காக ஓவியத்தை பெற்று வர பயணிப்பதும் என் எண்ணத்தை அதன் பால் குவியச் செய்தது.(மேலும் நாவல் முழுக்க துஸாத் பாணி ஓவியங்கள்ää பீகார் பழங்குடி ஓவியங்கள் என பல ஓவியக் குறிப்புகள் உள்ளன) ஆனால் அந்த மையத்துடனும் நாவலின் பலக் கதாப்பாத்திரங்களும் சம்பவங்களும் ஒன்றினைய மாட்டேன் என்று விலகிவிட்டன. உதாரணம். ஓவியங்களைப் பற்றி பேசுப்படும் குவி மையத்திற்கு நேரெதிராக அதன் பிரக்ஞையை எழுப்பாத இன்னொன்றும் எண்ணத்தில் குவிகிறது. இந்த சிந்தனை முடிவில்ää நான்ää நாவலின் ஒரு சிறு பகுதிதான் ஓவியம் என்கிற முடிவுக்கு வருகிறேன்.
3. இக்கதையில் நான்கு வகையான மனிதர்களின் தேடல்கள் இருப்பது மேலோட்டமாக என்னை தொந்தரவு செய்து கொண்டே இருந்தது அதனால் அத்தேடல்கள் வழியில் பயணித்துப் பார்த்தேன். அதாவது,
அ) பாகீரதிக்காக ஜெமினியைத் தேடும் எளிய பிரமாணன். அவன் வெறுமனே தன் அப்போதையப் பிரச்சனையின் வேரைத் தேடும் சாமன்யனாக மட்டுமே இருக்கிறான்.
ஆ) பாகீரதியை போட்டோவில் பார்த்துவிட்டு தவறவிட்ட தன் பழையக் காதலியென பிரமையில் டிராம் ஸ்டோக்கரின் கதாப்பாத்திரமாகவே மாறிவிட்ட மனநோயாளியின் தேடல். இவர் தான் இக்கதையைச் சொல்லும் அதன் காலக்கட்டத்தின் கதை சொல்லி. ஆனால் இக்கதாப்பாத்திரத்தின் தேடல் எனக்கு பிரதியை கூர்ந்து கவனிக்க வைக்கும் பாதையைத் தான் காட்டியதே தவிர தேடலை நிகழ்த்தவில்லை.
இ) மிதக்கும் வண்ண ஓவியம் என்கிற சிந்தனையெழுச்சியுடன் அதை படைப்பில் நிகழ்த்த வேண்டுமென்ற கலைஞனின் தேடல். இக்கதாப்பாத்திரத்தின் தேடல் சில இணைப்புகளை மட்டும் எனக்கு காட்டிவிட்டு மறைந்துவிட்டது.
ஈ)தன் காதலிக்காக இறந்துபோன ஜெமினியைத் தேடிவரும் தீவிர முற்போக்குவாதியான உறங்காப்புலி. இவன் கொஞ்சம் கொஞ்சமாக தேடிக்கொண்டேயிருப்பது தன் அகம் சார்ந்த காதல் அல்ல என்பதும் அது, தன் சிந்தனையின் படிந்த சமூகம் சாந்த பிரக்ஞை என்பதை அடையும் தரிசனம். இவனின் தேடலில் வழியில் தான் வாசகனும் பயணிக்க முடிக்கிறது.
4. அடுத்து இப்பிரதி பெரியாரிய சிந்தனையையும் இடதுசாரி மனநிலையையும் மறு ஆக்கம் செய்கிறது என்ற மையம். இதற்கு காரணம் நாவல் தொடங்குமிடம் பெரியாரின் தொன்னூற்றைந்தாவது பிறந்த தின மாநாடும் நாவலின் பிரதான முதன்மை பாத்திரமான உறங்காப்புலியின் பெரியாரியää தி.மு.க கொள்கைகளும் தான். மேலும் உறங்காப்புலி தேடி வரும் ஜெமினி என்கிற ஓவியனும் இடதுசாரி இயக்கத்திலிருந்த தமிழ் நாட்டுக்காரன். ஜெமினியைப் பற்றி சொல்லும் பகுதிகள் முழுதும் மேற்கு வங்கத்தில் அப்போது திளைத்திருந்த சிபிஐயின் நடவடிக்கைகளும் நக்ஸல்பாரி இயக்கமும் ஜெபி இயக்கங்களும். ஆனால் இந்த விவரங்கள் எல்லாமே மையம் சார்ந்த சிந்தனைகளை எனக்கு கூட்டினைவாக எழுப்பிக்கொண்டிருந்ததே தவிர நாவலின் மையத்திற்கோ அதன் கருவையோ காட்டவில்லை. ஆக இதுவும் நாவலின் மையம் அல்ல.
மேற்கண்ட நான்கு வழிகளையும் முயற்சித்துப் பார்த்து பிரதியிடம் தோற்றுவிட்ட மனநிலையே அதைப் பற்றி சிந்தனை என்னை தூண்டிக்கொண்டிருந்த நிறுத்தவில்லை. அப்போது எனக்கு தோன்றியதுதுதான் என்னை பிறிதொன்றை நோக்கி சிந்திக்கத் தள்ளியது.
1. நாவலின் எல்லா கதாப்பாத்திரங்களும் ஏன் கல்கத்தா என்கிற நிலத்தை நோக்கி நகர்கிறார்கள்?
2. பேரச்சாப்பா என்ற நிலத்திற்கும் இப்பிரதிக்கும் என்ன தொடர்பு?
3. கூக் சனத்தையும் பித்யா நதியும் இங்கு சொல்ல காரணம்?
4. பேராபுடீமா என்ற பெண்ணிற்கும் பாகீரதிக்கும் என்ன தொர்பு? இருவரும் பெண். மற்ற கதாப்பாத்திரங்களும் சம்பவங்களும் பெண் என்கிற ஒற்றை இழையால் பினைக்கப்பட்டிருப்பதேன்?
இந்த கேள்விகள் அனைத்திற்குமான விடையே இந்த பிரதி சொல்ல வந்திருப்பதாக என்னால் அதிகபட்சமாக பொருட்;படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது.
என் தரப்பிலான சில பதில்களை இக்கேள்விகளுக்கு பொருந்துமென்கிற நம்பிக்கையில் தொகுக்கத் தொடங்கினேன் அவை-
உறங்காப்புலி என்கிற நாத்திக, முற்போக்குவாதி சன்னதம் வந்து ஆடும் இடம்.
இது மிகமிக நுண் மையத்தை நாவலில் கட்டியெழுப்பியிருக்கும். அதாவது அவனுக்கு இங்கு நடைபெறும் சடங்குகளின் மீது நம்பிக்கை கிடையாது. அவனுடைய சிந்தனையில் அதுவரை(இங்கள்ய்யாவிடம் பேசிவிட்டு வரும் வரையிலும்) பாகீரதியின் மீதான காதல் மயக்கம் மட்டுமே உள்ளது. ஆனால் பித்யா நதிக்கரையில் மிதக்கும் எண்ணெய் கழிவுகளைப் பார்த்ததும் தொழிற்சாலைகளின் குரூர முகத்தைக் கண்டுகொள்கிறான். என்றைக்கு அவர்கள் கூக் இனத்தவர்களிடமிருந்து பேராபுடீமாவை அப்புறப்படுத்த இருக்கிறார்களெனவும் அதை எப்படி தடுத்த நிறுத்த முடியுமென யோசிப்பதற்கே இங்கள்ய்யாவுடன் உறங்காப்புலி தங்கியிருக்கிறான். இதற்கு அவன் தேர்ந்தெடுக்கும் முறை தான் ஆத்தகிகத்தில் புரையோடிப் போன சன்னதம் ஆடுவது. (மூட நம்பிக்கையில் திளைத்திருக்கும் சனங்களுக்கு புரிய வைக்க அவர்களின் வழியிலேயே செல்வது.) அதிலும் ஒரு சூட்சம் அவன் பயன்படுத்துகிறான். அதுää பேராபுடீமாவை அகற்றுவதை நிறுத்த அவளின் தோழியான அநூபவாய் தன்னுள் இறங்கியதாக மாறுவது. இதற்கு அவன் ஏற்கவே கைக்கொடுக்கிறது. அநூபா என்பவள் தான் தெக்கூவா உறக்கமின்றி அலைந்துத்திரிந்தவளை புலியில் உறங்க வைத்து பேராபுடீமாவாக மாற்றியää இங்கய்யாவிடம் கேட்டறிந்த பேராபுடீமாவின் பூர்வக்கதை ஒரு வேளை உறங்காப்புலியின் சன்னதத்தை அவர்கள் கேட்காமல் போனாலும் கூட என்றாவது அந்நிலத்தை மீட்கும் எண்ணம் தோன்றும் போது இதை முன்னமே அறிவித்த அநூபவாயை அவர்கள் நினைக்க வேண்டி வரலாம். அல்லது அநூபாவைத் தங்களை மீட்டெதாக எண்ணி என்றாவது அவளுக்கு கோவில் கட்டி இந்த நிலத்தையும் நதியையும் காப்பாற்றக் கூடுமென்ற நம்பிக்கை.
இந்த கூரியச்சிந்தனைக்குத்தான் உறங்காப்புலிக்கு அவனின் பெரியாரிய மனபாவப் போக்கு உதவுகிறது. சன்னதம் வந்து ஆடும்போது உறங்காப்புலி(அநூபா) சொல்லுவது ‘அங்கு பேராபுடீமாவை அழைத்துச் செல்லாதீர்கள் அவளுக்கு அங்கு பலி கிடைக்காது’ என்று. பலி என்பது கூக் இனம்போன்ற எல்லா பழங்குடியினவர்களுக்குமான பழக்கம். பலியிடுவதன் அர்த்தம் அவர்கள் சார்ந்த வனம்ää நதிää இயற்கை என ஒவ்வொன்றும் உயிர்பித்திருப்பதே. பேராபுடீமாவுக்கு பலி கிடைக்காது என உறங்காப்புலி உரைப்பது இயற்கையின் அழிவைத்தான்.
உறங்;காப்புலி அநூபாக மாறி பேராபுடீமா தெய்வத்திடம் பேசும் இடங்கள் மானுட இருப்பின் மீதான சிந்தனையை காட்டக்கூடிய இடங்கள். ‘நீ முன்புபோல் என் மடியில் புரண்டு தூங்க முடியாதுää இனி உன் மடியில் மற்றவர்களைத் தூங்க வைத்து கண் மூடாமல் காவலிருக்கும் காட்சியைக் கற்பனை செய்வது எனக்குத் துயரத்தைக் கொடுக்கிறதா அல்லது பரிகாசவுணர்வைக் கொடுக்கிறதா என என்னால் சரியாகச் சொல்லத் தெரியவில்லை’
பாகீரதியின் வீட்டில் மாட்டப்பட்டிருக்கும் ஜெமினி வரைந்த மூன்று வினோத ஓவியங்கள்.
அவை, காட்டின் நடுவே ஆண் ஒருவனும் இரண்டு பெண்களும் நின்றுகொண்டிருப்பதைப்போன்றவொன்றும்ää இரண்டாவது ஒரு பிரகாசமான மஞ்சள் நிற ஒளி வட்டத்தில் அதைச் சுற்றிலும் சில நீள்சதுர வடிவக் கட்டிடங்களும் அருவே ஒரு விலங்கின் நிழலுருவமும்ää முன்றாவது தூய வெண்ணிறப் பின் புலத்தில் தன் உடலைத் தரையை உந்தி மேலெழும் ஒரு நடன பாவத்தைப் போல் அபிநயித்தும் விறைப்பாகவும் நிறுத்தியிருக்கும்ää சிவப்புääகருப்பு ஆகிய இரு வண்ணம் மட்டுமே ஓர் உயரமான இளம் பெண்ணின் உருவம். இந்த மூன்று சித்திரங்களையும் வரைந்தது ஜெமினி. இவ்வோயியங்களை முழுமையாக நாம் தெளிவுபடுத்திக்கொள்ள ஜெமினி என்கிற கலைஞனின் கதாப்பாத்திரத்தை நோக்கி போக வேண்டியுள்ளது.
ஜெமினி தமிழ்நாட்டில் பிறந்த ஓவியன். தன் ஓவிய அறிதை; தேடி கல்கத்தாவிற்கு செல்கிறான். அவன் இயல்பிலேயே சமூகம் சார்ந்த சிந்தனைக் கொண்டிருப்பதால் அங்கிருக்கும் இடதுசாரி அமைப்புகளுடன் தன்னை இனைத்துக்கொள்கிறான். ஆனால் ஜெமினி அங்கு ஏற்கனவே இருந்த ஓவியர்களான ஹோரேவையும் ஹரன்தாஸைப் போன்ற வெறும் கலைத்தன்மை மட்டுமே கொண்டவன் அல்ல. அவன் எல்லாவற்றையும் வண்ணங்களுக்கு வெளியேதான் பார்க்கிறான். ஜெமினி அதிகம் விரும்பியதும் பழங்குடி பாணியிலான படைப்பை உருவாக்குவதே. கட்சி சார் நடவடிக்கையாக அவன் வங்காளம் முழுக்க அலைகிறான். செத்துக்கொண்டிருக்கும் விவசாயிகளும் நிலக்கிழார்களில் ஆதிக்கங்கமும் கழிவுகளாக மாறிவரும் நதியும் நிலங்களும் அவனைää கலைஞன் என்கிற படைப்பாளி மனநிலையைத் தாண்டி உந்திதள்ளி அலைக்கழிக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் அநீதிக்கெதிராக எழும் தன் கலையைக் கேள்விக்குட்படுத்துகிறான். ‘பழமையின் மீதான பிரிவேக்கமும் எதிர்காலம் பற்றிய கற்பனைகளும் இன்றைய அவலங்களைக காணவிடாமல் தங்கள் கண்களைப் கட்டிவிடக் கலைஞர்கள் அனுமதிக்கலாமா?’ (பக் 545) பித்யா நதிக்க்ரையின் அவலத்தில் தான் தேடியலைந்த ‘மிதக்கும் வண்ண ஓவியம்’ என்கிற லட்சியத்தின் சாரத்தை உணர்ந்திருக்க வேண்டும்.
ஜெமினி வரைந்த மூன்று வண்ணங்களையுமே பேரச்சாபாவுடனும் அவன் கண்ட காட்சிகளுடனும் ஒப்பிட முடியும். காட்டின் நடுவே நிற்கும் இரண்டு பெண்கள் ää வனத்தையும் அதில் வாழும் மக்களையுமாகவும் அடுத்த ஓவியமான எழுந்து நிற்கும் கட்டிடங்களும் அருகில் விலங்கின் நிழலுருவம் என்பது காட்டழிப்புக்கு பின்பு நகரமயமாவதும் அங்கிருந்து அகலும் விலங்கு எனவும் மூன்றாவது ஓவியம் ää வெறும் கருப்பு சிவப்பு வண்ணங்களால் தீட்டப்பட்ட உயரமான பெண் என்பவள் கூக் இனத்தின் தெய்வமான ; பேராபுடீமாவாக இருக்கலாம். இது ஜெமினி என்கிற கதாப்பாத்திரத்தை புரிந்து கொண்டதன் சாத்தியங்கள்.
வாஸ்தவத்தில் இந்த கதையில் பாகீரதி தன் மகளை தன் மடியில் உட்கார்த்தி வைத்து தூங்கச் செய்வதும் அவளுமே தூங்குவதற்காக மதியத்தில் அலைவதும் பின்னால் மையம் என்று நம்மால் சொல்லப்படுகிற பேரச்சப்பாவுடன் தொடர்புக் கொள்கிறது. அங்கு சொல்லப்படும் பேராபுடீமா என்ற தெக்கூவின் ஆன்மா தூக்கமிழந்து அலைகையில் அவளுக்குää அநூபாதான் தன் மடிமீது உறங்க வைத்தும் தொந்தரவு செய்யாத உடலான வனத்திலிருக்கும் புலியைக் காட்டும் யோசனையையும் கொடுக்கிறாள். ஆசிரியர் பேராபுடீமா கதாப்பாத்திரத்தினை இன்னொரு வடிவமாகவோ அல்லது அவளை யதார்த்தவுலகில் உருவாக்கும் பெண்ணாகவோ படைக்கவே பாகீரதி என்கிற பாத்திரத்தை உருவாக்கியிருக்கலாம். நமக்கு பேராபுடீமாவை புரிந்துகொள்ள பாகீரதிதான் உதவுகிறாள்.
எல்லா காதல் கதைகளும் கல்கத்தாவின் பித்யா நதிக்கரையில் கூக் இனத்தவர்களின் வாழ்வியலுக்குள் நுழையும் போது பொழ பொழ வென உதிர்ந்துவிட்டு தன்னை தற்சமயத்திற்கு மறைத்துக் கொண்டு பேராச்சாபாவின் காட்சி மட்டுமே வாசகனின் கண் முன் விவரிக்கிறது. (அங்கு எந்த விதக் குறுக்கீட்டையும் பிரதி வாசகனிடம் ஏற்படுத்தி அவனைக் களைக்கவில்லை) இது ஒருவகையில் வாசகன் அங்கு பிரக்ஞைபூர்வமாக சற்று கேட்க வேண்டுமென்பதற்காக கதைசொல்லியின் முன் திட்டமாகவும் அல்லது அதை சொல்லிவிட வேண்டுமென்கிற பதற்றமாகவும் இருக்கலாம்.
இந்த நாவலை வாசித்து முடித்ததும் இப்பிரதி ஒரு வட்டம் போல அமைந்திருப்பதை உணர்கிறேன். ஆமாம்ää நாவல்; முடியுமிடமான பேரச்சாபா என்கிற வனமும் அதிலிருக்கும் தேயாஸிää கூக் இனங்களின் அவலத்தை ஜெமினியுமே பார்த்திருக்கலாம் என்று இங்கு ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேனல்லவா அவர் வரைந்த ஓவியங்களிலும் அதன் தாக்கம் பிரிதிபலித்திருந்தது என்பதையும் குறிப்பிட்டிருந்தேன். அந்த ஓவியம் பாகீரதிக்கு அகஸ்மத்தாக கையில் கிடைக்கிறது(நாவலில் சொல்லப்பட்டதைப் போல) அந்த ஓவியங்களை வரைந்த ஜெமினி மீது தான் அவளுக்கு காதலும் ஏற்படுகிறது. அந்த பெயரை உச்சரித்தபோதுதான் அங்கு வந்து சேரும் உறங்காப்புலி என்கிற போராட்டக்காரனின் பிரக்ஞையில் பின்னால் அதைத் தேடும் உந்துவிசையை அப்பெயர் கொடுத்துää அவனை பேரச்சாப வரை பயணிக்கச் செய்கிறது( வாசகனையும்)
நாவலில் இரண்டு வகையான கட்டமைப்பை பா.வெங்கடேசன் ஏற்படுத்துகிறார். (அது அவரின் பிரத்யேகப் பாணி)ஒன்று கதைக்காக வரலாற்றை எடுத்துக்கொள்வது. இன்னொன்று வரலாறுக்காக கதைப் பின்னுவது. ஒரு உதாரணம். நாவலின் வரும் உறங்காப்புலியைப் பற்றி கூற வேண்டும். அவன் கதைப்படி ஒரு கோபக்காரன்ää தீவிர தி.மு.க காரன்ää பெரியார் விசுவாசிää சமூகத்தை சீர்திருத்தும் செயல்வீரன். இக்குணங்களைச் சொல்ல வேண்டும்.அதற்காக பா.வெங்கடேசன் இந்தி எதிர்ப்பு ääஇருப்புப்பாதை மற்றும் சிவாஜி மன்ற எரிப்பு என ஒவ்வொன்றிக்கும் நம்மை அழைத்துச் செல்கிறார். வெறும் அவன் ஒரு அசாத்தியமானவன் என்று சொல்லிவிட்டு நகர்விடுதல் நாவலின் கலையமைப்பு இல்லைதான் என நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இதுவும் மலர்விழி என்கிற அவனின் தங்கையின் காதல் கதைகளைச் சொல்லி சோர்வையும் அலுப்பையும் ஏற்படுத்தத்தான் செய்கிறது. (அது அவள் தன் அண்ணனின் காதலை புரிந்துகொள்ளும் தன்மைக்காக) இது போன்ற சில பக்கங்கள் வாசகனுக்கு சோர்வையும் அலுப்பையும் ஏற்படுத்தத்தான் செய்கிறது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். உறங்காப்புலி அப்பா சுந்தரபாண்டியனின் பாண்டித்தியத்தை சொல்வதற்காகவும் உறங்காப்புலியின் நண்பனின் காதல் கதைக்காவும் சிலபல பக்கங்களை நாவல் எடுத்துக்கொண்டிருக்கிறது என்பது என் வாசிப்பில் கிடைத்தவைகள். ஆனால் அவை வாசிப்பின் தடையாக இல்லை.
கதை முடியும் போது அரங்கநாதன் நம்பி அங்கும் தான் தேடிவந்து பாகீரதி மறுபடியும் இழந்துவிட்ட வலியுடன் கதையை நம்மிடம் விட்டுவிட்டு டிராகுலாவாக எழுந்து செல்கிறார். ஆனால் நாம் தேடி வந்தது அவரைப் போன்ற பாகீரதி என்ற பெண்ணைப் பற்றிய கதை அல்ல. பெண்ணின் ரூபத்தில் இந்த தேசம் முழுதும் இருக்கின்ற இயற்கையும் பெண்ணைப் போலவே மென்மையாக இருப்பதால் அவளின் அழிவை எளிதில் நிகழ்த்திக்கொண்டிருக்கும் யந்திரங்களின் கதை தான் என்று அமைதியாக அமர்கிறோம்.
(கிருஷ்ணப்ரியா அவா்களால் தஞ்சையில் நடத்தப்பட்ட பாகீரதி மதியம் நாவல் மீதான விமா்சனக்கூட்டத்தில் வாசித்தக் கட்டுரையின் இறுதி வடிவம்)